இன்று (1.9.21) தமிழக அரசு உத்தரவின்படி இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணாக்கர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டது. கோவிட் 19 ற்கான நிலையான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றவுதன் அவசியத்தை பற்றி முதல்வர் விளக்கினார். பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கை கழுவும் முறை, சமூக இடைவெளி பின்பற்றுதல், உடல் வெப்பநிலை பரிசோதித்தல் போன்ற நிகழ்வுகள் முதல்வரின் ஆலோசனைப்படி பேராசிரியர்கள் கண்காணிப்பில் மாணாக்கர்கள் பின்பற்றினார்கள்.
கரூர் மாவட்டம் தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 2.9.21 கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் க.ராதாகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி மாணாக்கர்கள் 70 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.